டீ தோட்ட பணி பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் துயரம்!!

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (13:09 IST)
டீ தோட்டத்தில் வேலை செய்த மூன்று பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அசாம் மாநிலம் ஜோர்ஹாத் நகரை அடுத்த கூடொங்கா டீ தோட்டத்தில் ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகின்றனர். வேலையை முடித்து இரவு 8 மணியளவில் வேனில் வீடு திரும்புவது வழக்கம்.  
 
இந்நிலையில் 12 பெண்கள் சென்ற வேன் ஒன்று, 9 பெண்களை அவர்களது வீடுகளில் இறக்கி விட்டு, பின்னர் 3 பெண்களுடன் பயணித்தது.
 
இதனை பயன்படுத்திக்கொண்டு, ஓட்டுநர் யாருமில்லாத மறைவான இடத்தில் வண்டியை நிறுத்தி, வண்டியின் ஓட்டுநரும், உதவியாளரும் சேர்ந்து 3 பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் வண்டியில் இருந்து கீழே குதித்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றியுள்ளனர். 
 
இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடுத்த கட்டுரையில்