சிறையில் சான்விச் சாப்பிடும் சசிகலா: மயங்கி விழுந்த இளவரசி!

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (12:56 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர்கள் சிறைக்குள் என்ன செய்கிறார்கள் போன்ற தகவல்கள் அவ்வப்போது கசிகின்றன.


 
 
இந்நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா அரிசி உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதில்லையாம். அதற்கு பதிலாக அவர் சான்விச் தான் அதிகமாக எடுத்துக்கொள்வதாக தகவல்கள் வருகின்றன. சசிகலா அரிசி உணவை தவிர்பதற்கு காரணம் சர்க்கரை பிரச்சனை என்கிறார்கள்.
 
ஆனால் சசிகலாவுடன் சிறையில் உள்ள இளவரசி அரிசி சாதம் அதிகம் சாப்பிடுகிறாராம். இதனால் அவருக்குச் சர்க்கரை அளவு அதிகமாகிவிட்டதாம். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி மதிய வேளையில் இளவரசிக்கு சர்க்கரையின் அளவு அதிகமாகி அவர் சிறை வளாகத்தில் இளவரசி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து உடனடியாக சிறைக்குள் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளவரசிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தினமும் நடைப்பயிற்சி செய்யவும் சர்க்கரை இல்லாமல் சாப்பிவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்