சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த வருடம் இணையதளம் மூலம் விபச்சாரம் நடப்பதாக கூறி பாலியல் தொழில் இணையதள பக்கங்களுக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் தாரா(45) என்ற பெண் வாட்ஸ்அப் செயலி மூலம் குரூப் ஒன்றை தொடங்கி, அதில் பெண்களின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார். அதை வைத்து தாரா மற்றும் அவரது உதவியாளர்கள் மூன்று ஆண் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், 8 வருடங்களாக பாலியல் தொழில் செய்துவ் வரும் தாரா, கடந்த 3 வருடங்களாக வாட்ஸ்அப் மூலம் இதை செய்து வருவது தெரியவந்துள்ளது.