பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள மதூர் அருகில் சோமஹல்லி பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் சவி என்பவர் பைக் சோதனையில் ஈடுப்பட்டு இருந்தார்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்கள் இருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் கூறியதாவது:-
ஹெல்மெட் அணியாமல் அணியாமல் வந்த அவர்கள் ரூ.100 அபராதம் கட்ட முன்வந்துள்ளனர். ஆனால் அதை வாங்காமல் அவர்களை தவறாக பேசியதோடு அவர்களை அடித்து சட்ட காலைரை பிடித்து இழுத்துச் சென்றார், என தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று, அரசாங்க அதிகாரியை கடைமையை செய்யவிடாமல் தடுத்ததற்காக வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இதுதொடர்பாக காவல்துறை மூத்த அதிகாரி, சவி மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றம் இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.