மகிளா காவல் நிலையத்தில் கற்பழிக்க பட்ட பெண்ணை சந்திக்க சென்ற மகளிர் ஆணைய தலைவி சோமிய குர்ஜார் அந்த பெண்ணுடன் எடுத்த செல்ஃபி ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருப்பவர் சோமியா குர்ஜார். இவர், நேற்று மகிளா காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டப் பெண்னை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
இது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த செல்ஃபியில் ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரான சுமன் சர்மாவும் இருப்பதுதான்.