இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி அடித்து விரட்டிய கொடூரம்…

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (17:41 IST)
பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ் குமார் தலைமையில்னான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள முசாபூர் மாவட்டத்தில்  தன்  மீது  புகார் கொடுத்த ஒரு இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் அடித்தி நிர்வாணப்படுத்தி ஓடவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிர்ஜாபூரில் உள்ள ஒரு கிராமத்தில்  லீலா என்ற பெண்  அங்கன்வாடியில் ஊழியராக இருப்பதாக தெரிகிறது. எதோ ஒரு காரணத்திற்க்காக அப்பெண் மீது இன்னொரு இளம் பெண் போலீஸில் புகார் கொடுத்தார் என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அங்கன்வாடு ஊழியர் லீலா சிலருடன் சென்று தன் மீது புகார் கொடுத்த பெண்ணை அடித்து, உடைத்து, நிர்வாணப்படுத்தி வீதியில் ஓடவிட்டுள்ளனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இதுகுறித்து விசாரிக்காத காவல்துறையினர் சமூகவலைதளங்களில் இந்த விசயம் தீயாகப் பரவிவருவதை அடுத்து,  இளம் பெண்ணைத் தாக்கிய கொடூரர்களைக் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்