டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் இறந்து போன தனது கணவரின் விந்தணுவை தருமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். இது இயல்புக்கு மாறான ஒரு கோரிக்கை என்பதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு என கொண்டு வரப்பட்ட இளம் வயதான ஒருவர் சற்று நேரத்தில் உயிரிழந்தார். அவருக்கு திருமணமாகியும் குழந்தையில்லை.
இந்நிலையில் அவர் இறந்துவிட்டதால் அவரது இளம் மனைவி கணவரின் விந்தணுவை கேட்டு மருத்துவரகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்த கோரிக்கைக்கு அவரது கணவன் வீட்டாரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் இறந்த ஒருவரின் உடலில் இருந்து விந்தணுவை எடுப்பதற்கு சட்ட வழிகாட்டுதல்கள் இல்லை என மருத்தவர்கள் நிராகரித்து விட்டனர். கணவர் உயிரோடு இருக்கும் போது, அதுவும் நல்ல மனநிலையில் இருக்கும் போது தான் அவரின் விந்தணு எடுக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை தான் உள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கணவன் இறந்த பின்னரும் விந்தணுவை எடுக்க அனுமதி உள்ளது. அதனை மற்ற பெண்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இந்தியா போன்ற நாடுகளில் இன்னமும் அனுமதி இல்லை.