முதல் மனைவியுடன் ரீல்ஸ்.. கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த 2வது மனைவி..!

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2023 (14:55 IST)
முதல் மனைவியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுத்த கணவனின் பிறப்புறுப்பை இரண்டாவது மனைவி பிளேடால் அறுத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த்பாபு என்பவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து வீரம்மா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 
 
இந்த நிலையில் ஆனந்த்பாபு தனது முதல் மனைவியுடன் எடுத்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்துள்ளார். அதை பார்த்த இரண்டாவது மனைவி அதிர்ச்சி அடைந்து இன்னும் முதல் மனைவியுடன் நீ வாழ்ந்து வருகிறாயா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  
 
இந்த வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆனந்த்பாபுவின் பிறப்புறுப்பை பிளேடால் வீரம்மா அறுத்ததை அடுத்து அவர் அலறி துடித்துள்ளார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆனந்தை மீட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்