நாடாளுமன்றத்தை விட்டு ஓடிய எதிர்க்கட்சிகள்: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி

ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (10:27 IST)
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை விட்டு விட்டு எதிர்கட்சிகள் ஓடி விட்டன என பிரதமர் மோடி விமர்சனம் செய்து உள்ளார். 
 
சமீபத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. ஆனால் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 
 
இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது  ’நாங்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முறியடித்தோம். அவர்கள் பரப்பிய எதிர்மறையான கருத்தையும் முறியடித்தோம் 
 
ஆனால் எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டு போட விரும்பவில்லை. ஏனென்றால் அது கூட்டணியில் விறுசிலை ஏற்படுத்தி விடும் என்று எதிர்கட்சிகள் பயந்தன. 
 
அதனால் தான் அவையை விட்டு ஓடினர் என்று கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்