பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறாரா? உத்தவ் தாக்கரே கட்சி எம்பி தகவல்..!

திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (13:30 IST)
பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்றும் அவ்வாறு போட்டியிட்டால் பிரியங்கா காந்தி வெற்றி பெறுவார் என்றும் உத்தரவு தாக்கரே தரப்பு எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவ்வாறு வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட்டால் நிச்சயம் பிரியங்கா காந்தி வெல்வார் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.  
 
வாரணாசி மக்கள் பிரியங்கா காந்தியை எதிர்பார்க்கிறார்கள் என்றும் ரேபரலி, வாரணாசி, அமேதி தொகுதிகளில் பாஜகவுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் பிரதமர் மோடி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட போவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட்டால் அங்கும் பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்