எனக்கு முன்னாடியே அவர் விண்வெளி நாயகன் ஆயிட்டார்! க்ரேஸி மோகன் குறித்து கமல்ஹாசன்!

Prasanth Karthick

வெள்ளி, 2 மே 2025 (16:23 IST)

காலம் சென்ற க்ரேஸி மோகனின் புத்தக வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், கே எஸ் ரவிக்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

தமிழ் சினிமாவில் நடிகர், வசனகர்த்தா என பல பங்களிப்புகளை செய்தவர் க்ரேஸி மோகன். ஏராளனான நாடகங்களை எழுதி நடித்து இயக்கிய க்ரேஸி மோகன் கடந்த 2019ம் ஆண்டில் காலமானார். இவரும், கமல்ஹாசனும் இணைந்த வசூல்ராஜா, அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா என அனைத்துப் படங்களும் காமெடி கலக்கல் ஹிட்.

 

இந்நிலையில் மறைந்த க்ரேஸி மோகனின் 25 புத்தகங்கள் வெளியிடும் விழா நடந்தது. அதில் பேசிய கமல்ஹாசன் “நானும் க்ரேஸி மோகனும் வேறுவேறு வீட்டில் பிறந்த சகோதரர்கள். நாங்கள் எந்த ஊரில் இருந்தாலும் தினமும்  பேசிக் கொள்வது வழக்கம். நானும் அவரும் பேசிய கதைகள் அனைத்தும் வெற்றி திரைப்படங்கள். எனக்கு முன்னாலேயே விண்வெளி நாயகர் ஆனவர் மோகன் அண்ணன் தான். என்னை விட்டுவிட்டு அவர் முதலில் சென்றுவிட்டார். எல்லாரும் ஒருநாள் போய்தானே ஆக வேண்டும். ஏதாவது  மோகன் அண்ணா ட்ராமா பார்க்க வேண்டுமென்றால் அங்கு வந்து பாருங்கள்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்