மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்க உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆளுனரை சந்தித்து ஆட்சியமைப்பது குறித்து கோரியுள்ளார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மக்களுக்கு அவசர காலங்களில் உதவியாக விளங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் முன்கள பணியாளர்களாக அடையாளப்படுத்தபடுகின்றனர்.
இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.