”நமஸ்தே”னு டைப் பண்ணுங்க.. தடுப்பூசி மையங்களை கண்டறிய வாட்ஸப் எண்!

திங்கள், 3 மே 2021 (12:51 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் அருகிலுள்ள தடுப்பூசி மையங்களை வாட்ஸப் வழியாக தெரிந்து கொள்ள மத்திய அரசு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக 45 வயதிற்கு அதிகமானோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி மையங்களை வாட்ஸப் மூலமாக அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பில் “நமஸ்தே” என்று செய்தி அனுப்பினால் அது நாம் வசிக்கும் பகுதியின் பின்கோடு கேட்கும். அதை பதிவு செய்தால் அப்பகுதியில் உள்ள கொரோனா தடுப்பூசி மைய விவரங்களை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்