ஆட்டோவை தர தர என இழுத்து சென்ற டிரக்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ

Arun Prasath
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (15:55 IST)
டிரக் ஒன்று நிலை தடுமாறி ஆட்டோவை தரதரவென இழுத்து சென்றதில் ஆசிரியை ஒருவர் பலியாகியுள்ளார்.இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடகா மாநிலம் மங்களூரில் சாலை ஒன்றில் ஒரு டிரக் எதிரில் வந்த ஆட்டோ மீது மோதி விடாமல் திரும்பிய போது மற்றொரு ஆட்டோ மீது மோதியது. இதில் டிரக் அந்த ஆட்டோவை தர தரவென்று சில தூரம் இழுத்து சென்றது.

இதில் ஆட்டோவில் பயணித்த கேந்திர வித்யாலயாவை சேர்ந்த ஆசிரியை சைலஜா ராவ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஆட்டோ டிரைவர் சாலையில் வந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்