நிலவில் பிளாஸ்மாவை கண்டறிந்த விக்ரம் லேண்டர்

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (17:08 IST)
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் வெற்றிகரமாக  நிலவில் தரையிறங்கியது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை அடுத்து விண்வெளியில்  விண்கலத்தை தரையிரங்கிய 4 வது நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

விக்ரம் லேண்ரில் இருந்து கீழிறங்கிய பிரக்யான் ரோவர்  நிலவின் பல  ஆய்வுகள் மேற்கொண்டு, தனிமங்களை கண்டறிந்து வருகிறது.

அதன்படி, நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை ஏற்கனவே சந்திராயன் 3 விண்கலத்தில் அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர்  உறுதி செய்துள்ள நிலையில் இன்று பிரக்யான் ரோவரில் உள்ள மற்றொரு கருவியும் நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை உறுதி செய்தது. 

இதுபற்றி  இஸ்ரோ தன் சமூக வலைதளத்தில்  அறிவித்த நிலையில்  நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில்  பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தற்போது தகவல் தெரிவித்துள்ளது.

Chandrayaan-3 Mission:
In-situ Scientific Experiments

Radio Anatomy of Moon Bound Hypersensitive Ionosphere and Atmosphere - Langmuir Probe (RAMBHA-LP) payload onboard Chandrayaan-3 Lander has made first-ever measurements of the near-surface Lunar plasma environment over the… pic.twitter.com/n8ifIEr83h

— ISRO (@isro) August 31, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்