நேற்று நிலவில் ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்த பிரக்யான் ரோவர், நிலவில் தென்பகுதியில், கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம், குரோமியம், மாங்கனீசு உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளளது.
இதையடுத்து, அங்கு ஹைட்ரஜன் உள்ளதா என கண்டறிந்து வருகிறது.
இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்ஞான் ரோவர்,விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளது. இதை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.