பயணிகள் வரவேற்பு குறைவு.. திடீரென நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்..!

Webdunia
திங்கள், 15 மே 2023 (11:15 IST)
பயணிகள் வரவேற்பு குறைந்ததன் காரணமாக வந்தே பாரத் ராயல் திடீரென நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை - மைசூர் உள்பட நாட்டில் பல வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த ரயில்களுக்கு பெரும்பாலும் பயணிகளின் ஆதரவு இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சமீபத்தில் நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் 50 சதவீத அளவுக்கு முன்பதிவு நடப்பதால் திடீரென தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில் செகந்திராபாத் மற்றும் திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்