மகளை கொலை செய்ய கூலிப்படை அமைத்த தாய்.. கடைசியில் நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்..!

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (18:51 IST)
மகளை கொலை செய்ய தாய் கூலிப்படை அமைத்த நிலையில், அந்த கூலிப்படையை சேர்ந்தவர் தாயையே கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அல்கா தேவி என்பவர், தனது மகள் ஒரு ரவுடியை காதலிப்பதால், தனது மகளை கொல்ல கூலிக்குப் பணம் கொடுத்து ஆளை ஏற்பாடு செய்தார்.

ஆனால் பெரும் டிவிஸ்ட்டாக யாரை அல்கா தேவி கூலிப்படையாக தேர்வு செய்தாரோ, அந்த நபரே அல்கா தேவியின் மகளை காதலித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அல்கா தேவியின் மகள் மற்றும் அவருடைய காதலன் சுபாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து தாயை கொலை செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில், மகளை கொல்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கிய காதலன் சுபாஷ், அல்கா தேவியை கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து, அல்காதேவி கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், சுபாஷ் மற்றும் அவருடைய காதலி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைச் சம்பவம் உத்தரப்பிரதேச போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்