டிக் டாக் அக்கவுண்ட் தொடங்கிய உத்தரகாண்ட் போலீஸ் – என்ன வீடியோ பண்றாங்க தெரியுமா?

Webdunia
சனி, 17 ஆகஸ்ட் 2019 (17:48 IST)
டிக் டாக் செயலியால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும், பல உயிர் பலிகள் ஏற்படுவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் டிக் டாக்கில் பிரத்யக அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது உத்தரகாண்ட் போலீஸ்.

இந்த அக்கவுண்டில் இருந்து டிக் டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறது உத்தரகாண்ட் போலீஸ். பெண்களிடம் யாராவது அத்து மீறினால் அவர்களை எப்படி வீழ்த்துவது, சுதந்திர தினத்தன்று காவலர்களின் அணிவகுப்பு ஆகியவற்றை அதில் பதிவிட்டு வருகின்றனர்.

டிக் டாக் விரும்பிகளும் அந்த வீடியோக்களை பார்த்து லைக் செய்து, ஷேர் செய்தும் வருகின்றனர். இதுவரை அந்த வீடியோக்களை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய உத்தரகாண்ட் காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு துறையின் ஜெனரல் அஷோக் குமார் “டிக் டாக் செயலி மக்களை சென்றடைவதற்கான எளிமையான வழி. இதன் மூலம் சைபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, சமூக சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றை வீடியோவாக மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என திட்டமிட்டுள்ளோம்” என கூறியிருக்கிறார்.

உத்தரகாண்ட் காவல்துறையின் இந்த நேர்மறை சிந்தனையை பலரும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்