ரசகுல்லா குடுத்து ஓட்டு வாங்க முயற்சி! – 20 கிலோ ரசகுல்லாவுடன் இருவர் கைது!

Webdunia
வியாழன், 6 மே 2021 (12:12 IST)
உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரசகுல்லா கொடுத்து வாக்கு சேகரிக்க முயன்றவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் உத்தர பிரதேசத்திலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது. படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் நோயாளிகள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே உத்தர பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளது.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்தல் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் வாக்கு சேகரிக்க கொரோனா விதிமுறைகளை மீறி இருவர் ரசகுல்லா விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கையும், ரசகுல்லாவுமாக பிடித்த உத்தரபிரதேச போலீசார் இருவரையும் கைது செய்ததுடன், 20 கிலோ ரசகுல்லாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்