இந்தியாவில் தற்போது ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த 24 மணிநேரத்தில் 3 ,82,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 3,38,439 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 34,87,229 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும்போது, அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்கு இந்தியாவில் கொரொனா பாதிப்பு கடினமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்குதான் இறப்பு விகிதங்களைக் குறைப்பதற்கான ஒரே வழி எனத் தெரிவித்துள்ளனர்.