மாட்டுத் தொழுவத்தில் தூங்கினால் புற்றுநோய் தீரும்.. உ.பி. அமைச்சர் சஞ்சய் சிங்

Mahendran
திங்கள், 14 அக்டோபர் 2024 (11:06 IST)
மாட்டுத் தொழுவத்தில் படுத்து தூங்கினால் புற்றுநோய் தீரும் என்று உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் சஞ்சய்சிங் அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாட்டுத் தொழுவத்தில் படுத்து தூங்கி, மறுநாள் காலை மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்தால் புற்றுநோயிலிருந்து நலம் பெறலாம் என்று உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் சிங் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாடுகளை தினமும் இருவேளை தடவி கொடுத்தால் ரத்த அழுத்த பிரச்சனை தீரும் என்றும், பத்து நாட்கள் இவ்வாறு செய்தால் எந்தவித நோய்களும் வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மாட்டு கோமியத்தை குடித்தால் பல்வேறு நோய்கள் தீரும் என்று பாஜக அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், தற்போது மாட்டுத் தொழுவத்தில் படுத்து தூங்கினால் புற்றுநோய் தீரும் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்