பிரதமர் நரேந்திர மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டுகளை இடிக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
உத்தர பிரதேசம் கான்பூரில் நடைபெற்ற கங்கை நதி ஆணைய கூட்டத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது அங்குள்ள படிக்கட்டுகளில் அவர் ஏறி சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டு ஒன்றில் இடறி கீழே விழுந்தார். அவர் இடறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மோடி தவறி விழுந்த படிக்கட்டுகளை இடிக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. படி சிறியதாகவும், குறுகலானதாகவும் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதற்கு முன்னரே பலர் அந்த படிக்கட்டுகளில் இடறி விழுந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் அந்த படிக்கட்டை மட்டும் இடித்து விட்டு சரியான அளவில் புதிய படி கட்டப்படும் என கோட்ட ஆணையர் தெரிவித்துள்ளார்.