உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (16:01 IST)
உத்தரகாண்ட்டில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக தௌலிங்கா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகமானது. இதனால் கரையோரம் தங்கியிருந்தவர்களின் குடிசைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இன்று காலை வரை சுமார் 150 பேர் வரை மாயமாகியுள்ளதாகவும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இப்போது மாயமானவர்களின் எண்ணிக்கை 170 ஆகவும், பலி எண்ணிக்கை 19 ஆகவும் உயர்ந்துள்ளது.

தௌலிங்கா நதிக்கரை பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்