இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வரும் சூழ்நிலையில், நாட்டின் பாதுக்காப்பை உறுதிப்படுத்த ஆயுதங்களையும், போர் கருவிகளையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இதன்படி ரஷ்யாவுடன் கூட்டணி சேர்ந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல், ஆயுதங்களை உற்பத்தி செய்யவும் இந்தியா முடிவு செய்தது.
இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த எந்த ஆயதங்கள், உபகரணங்களை வாங்க வேண்டும் என்றாலும், வெளிநாட்டு நிறுவனங்கள் முதலில் மத்திய அரசால் தேர்வு செய்யப்படும் இந்திய வங்கிகள் இந்த நிறுவனத்திற்கு உத்திரவாதங்கள் அளிக்க வேண்டும். இதுவே இந்திய அரசு பின்பற்றி வரும் விதிமுறை.
ரஷ்யாவின் யுனைடெட் ஷிப்பில்டிங் கார்பரேஷன் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது அமெரிக்கா அரசு Specially Designated Nationals (SDN) தடைகளை விதித்தது. இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்திய வங்கிகளால் ரஷ்ய நிறுவனங்களுக்கு உத்திரவாதம் அளிக்க முடியவில்லை.
இது அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகள், நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனை என்றாலும், மறைமுகமாக இந்தியா இதில் பாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.