யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா! பதவிக்காலம் முடியும் முன் எடுத்த முடிவு..!

Mahendran
சனி, 20 ஜூலை 2024 (10:59 IST)
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி என்பவர் திடீரென ராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் தனது பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியான பூஜா கெட்கர் விவகாரத்தில் போலிச் சான்றிதழ் பயன்படுத்தி தேர்வானதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விஷயம் மிகப்பெரியதாக ஊடகங்களில் வெடித்துள்ள நிலையில் யுபிஎஸ்சி தலைவர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் யுபிஎஸ்சி ஆணைய தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2017 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி ஆணையத்தின் உறுப்பினராக சேர்ந்த மனோஜ் சோனி, 2023 ஆம் ஆண்டு மே மாதம் யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்றார். 2029 ஆம் ஆண்டு வரை அவரது பதவிக்காலம் இருக்கும் நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பே அவர் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட விவகாரங்களுக்காக ராஜினாமா செய்வதாக கூறிய போதிலும் பூஜா கெட்கர் விவகாரம் காரணமாகத்தான் அவர் ராஜினாமா செய்திருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்