நாடு முழுவதும் யுபிஐ சேவை திடீர் முடக்கம்! அதிர்ச்சியில் டிஜிட்டல் பயனாளிகள்..!

Siva

வியாழன், 27 மார்ச் 2025 (07:37 IST)
நாடு முழுவதிலும் யுபிஐ பணப்பரிமாற்ற சேவையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் டிஜிட்டல் பயனாளிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நேற்று இர்ஃஅவு 7 மணி முதல் யுபிஐ சேவை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டவுன்டிடக்டர் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, இதுவரை 23,000க்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளன.
 
பல்வேறு செயலிகளின் மூலம் யுபிஐ சேவை பயன்படுத்தப்படும் நிலையில், இந்த செயலிழப்பு பயனர்களுக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. டவுன்டிடக்டர் வெளியிட்ட தகவலின்படி, "கூகுள் பே"யில் 296 புகார்கள், "பேடிஎம்" பயனர்களிடமிருந்து 119 புகார்கள், மற்றும் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ செயலியில் இருந்து 376 புகார்கள் வந்துள்ளன.
 
சமூக வலைதளங்களில் பலரும் ஜி பே, போன் பே போன்ற செயலிகளின் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியவில்லை என அதிருப்தியுடன் பதிவு செய்து வருகின்றனர். சிலர், இது சிலருக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனையா, அல்லது யாருக்கும் செயல்படவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஒருவர், "முதல் முறையாக யுபிஐ முற்றிலும் முடங்கியிருப்பதை பார்த்துள்ளேன். இது வங்கிகளோ, தனியார் செயலிகளோ அல்ல, அரசின் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) நிர்வகிக்கும் சேவையே முற்றிலும் செயலிழந்துள்ளது" என கவலையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து இன்னும் விளக்கம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்