ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

Prasanth K

ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (16:04 IST)

இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவோடு இணைந்து வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ததாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் வேதனை தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் “எங்கள் கடமைகளில் இருந்து நாங்கள் ஒருபோதும் தவறவில்லை. கட்சிகளிடையே நாங்கள் எந்த பாரபட்சமும் பார்ப்பதில்லை. SIR நடவடிக்கை என்பது ஒட்டுமொத்த தேர்தல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதிதான். இதில் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கும் உள்ளது. இந்த விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுகிறது. 

 

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் இந்திய அரசியல் அமைப்பையே அவமதிப்பதாகும். எதிர்கட்சிகள் தங்கள் குற்றச்சாட்டுகளை தெளிவாக வரையறுத்துக் கூற வேண்டும். வாக்கு திருட்டு போன்ற வார்த்தை பிரயோகம் அரசமைப்பை அவமதிப்பதாகும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்