வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் நோக்கில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இதில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜ்ஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த யாத்திரை அடுத்த 15 நாட்களுக்கு பீகாரில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி தலைநகர் பாட்னாவில் இந்த யாத்திரை நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையின் மூலம் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, வாக்கு திருட்டு குறித்துப் புகார் அளித்த காங்கிரஸ் கட்சியை நேரில் வந்து சந்திக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. ஆனால், ஆணையத்தை நேரில் சந்திக்கும் திட்டம் இல்லை என்று ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.