உதவி பேராசியர் பதவிக்கு பி.எச்.டி கட்டாயம் இல்லை! – பல்கலை. மானிய குழு அறிவிப்பு!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (08:49 IST)
இந்தியாவில் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிகளுக்கு பி.எச்.டி கட்டாயம் என்ற விதிமுறையை பல்கலைகழக மானிய குழு ஒத்தி வைத்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் அதுசார்ந்த கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்போர் பி.எச்.டி பெற்றிருப்பது அவசியம் என கடந்த 2018ல் பல்கலைகழக மானியக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் இதற்கு உதவிப் பேராசிரியர்கள் பலரிடையே எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இந்நிலையில் உதவி பேராசிரியர்களுக்கு பி.எச்.டி கட்டாயம் என்ற உத்தரவை 2023 வரை பல்கலைகழக மானியக்குழு ஒத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்