டிரம்ப் ஒரு குழப்பவாதி.. எல்லாவற்றையும் குழப்பிவிட்டார்: கங்கனா ரனாவத்

Mahendran

வெள்ளி, 11 ஜூலை 2025 (17:57 IST)
"டிரம்ப் ஒரு பெரிய குழப்பவாதி என்றும், அவர் அமெரிக்காவின் பல விஷயங்களை குழப்பிவிட்டார்" என்றும் நடிகையும் இமாச்சலப் பிரதேச எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தான் அமெரிக்க அதிபர் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்ததாகவும், ஆனால் சமீபகாலமாக அவர் அமெரிக்காவுக்குக்கூட உதவாத வகையில் சில முடிவுகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
 
 "ஆபரேஷன் சிந்தூர்" விஷயத்தில் முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சியால் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்றும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்கதான் தாக்குதல் நிறுத்தப்பட்டது என்றும் கூறினார். ஆனால், டிரம்ப் செல்லும் இடமெல்லாம் 'நான்தான் போரை நிறுத்தினேன்' என்று கூறி எல்லாவற்றையும் குழப்பிவிட்டார்" என்றும் அவர் தெரிவித்தார்.
 
ராகுல் காந்தி கூட ஆபரேஷன் சிந்தூரை விமர்சனம் செய்தார் என்றும், ஆனால் அதை யாரும் நம்பப் போவதில்லை என்றும் தெரிவித்தார். 
 
மேலும், பாகிஸ்தான் நடிகருடன் ஒரு படத்தில் நடிப்பது குறித்து கூறிய கங்கனா "இந்திய கிரிக்கெட் வீரர்கள் எத்தனையோ பேர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுடன் நட்புடன் இருக்கிறார்கள். ஒரு படத்தில் இணைந்து நடிப்பதால் நாட்டிற்கு எதிராக வேலை செய்கிறேன் என்பது அர்த்தம் அல்ல" என்றும் அவர் ஒரு கேள்விக்குப் பதிலளித்தார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்