75 வயதில் அரசியல் தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்ததை அடுத்து, பிரதமர் மோடிக்கு மறைமுக செய்தியை அல்லது எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாக்பூரில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மோகன் பாகவத், "உங்களுக்கு 75 வயது ஆகிவிட்டால், நீங்கள் இப்போது உங்களுடைய வேலைகளை நிறுத்திவிட்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்" என்று கூறினார். 75 வயது ஆகிவிட்டால் ஒதுங்கி நின்று மற்றவர்களுக்கு வழிவிடுங்கள் என்றும், தேச சேவைக்கு தன்னை அர்ப்பணித்த போதிலும் அதற்கும் ஒரு வயது, நேரம் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு தற்போது 74 வயது ஆகிவரும் நிலையில், அவருக்கான மறைமுக செய்தியாகவே மோகன் பாகவத்தின் உரை பார்க்கப்படுகிறது. எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் 75 வயது எட்டிய பிறகு ஓய்வு பெற வேண்டும் என்று பிரதமர் மோடி அப்போது கட்டாயப்படுத்தினார். இப்போது அதே விதி அவருக்கும் பொருந்தி வரும் நிலையில், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், அமித் ஷாவுக்கு தற்போது 60 வயது மட்டுமே ஆவதால், பிரதமர் பொறுப்பை அவர் ஏற்கலாம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.