இனி சன்னியாசிகளுடன் தான் பயணம்.. தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி: அண்ணாமலை

Siva

வெள்ளி, 11 ஜூலை 2025 (09:03 IST)
தமிழகத்தில் விரைவில் ஆன்மீக ஆட்சி மலரும் என்றும், இனி சன்னியாசிகளுடன் பயணம் செய்ய போவதாகவும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவையில் நடைபெற்ற காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின் 31வது ஜெயந்தி விழாவில் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
 
"எல்லா இடங்களிலும், எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொல்லக்கூடிய துணிவு ஆதீனங்களுக்கு மட்டும்தான் உள்ளது. ஆதீனங்களிடம் பெரும் அருளாசி நமக்கு மனப்பக்குவத்தைக் கொடுக்கிறது. 
 
எங்கெல்லாம் நம்முடைய பெரியவர்கள் இருக்கிறார்களோ, அங்கே முறையான பூஜைகள், வழிபாடுகள் உள்ளன. ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாலும், சன்னியாசிகள் முன் தரையில் அமர்கிறார்களே, அதுதான் உண்மையான ஆன்மீக ஆட்சி. 
தமிழகத்தில் விரைவில் ஆன்மீக ஆட்சி அமையும் என்றும், இது நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், சனாதன தர்மம் காக்க சன்னியாசிகளுடன் இனி பயணிப்பேன் என்றும் அவர் கூறினார்.
 
அண்ணாமலையின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்