நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஏழைகளையும் விவசாயிகளையும் கை தூக்கி விடும் பட்ஜெட் இது என்றார்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு காப்பீடுகள் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய பாதுகாப்பை வழங்கி உள்ளது என்று அவர் கூறினார். மேலும், சோலார் தகடுகள் அமைப்பதன் மூலம் ஒரு கோடி வீடுகள், இலவச மின்சார சேவை பெற முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்களுக்கானது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.