தென்மேற்கு பருவமழையால் பல மாநிலங்களில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில வாரமாக கனமழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட அரபிக்கடலோர மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல நகரங்கள், கிராமங்களில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கனமழை தொடர்ந்து வருகிறது. மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வரும் நிலையில் புனே மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கடக்வாஸ்தா ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது.
சமீபத்தில் முக்தா ஆற்றை கடக்க முயன்றவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதனால் புனே மாவட்டத்தில் உள்ள நீர்நிலை சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலா தளங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.