புனித் ராஜ்குமாரின் கடைசி படம் செய்த சாதனை!

செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (07:45 IST)
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் அவருடைய கடைசி படமான ‘ஜேம்ஸ்’ சமீபத்தில் வெளியானது.
 
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் கர்நாடக மாநிலத்திற்கு மட்டும் ரூபாய் 100 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கர்நாடக மாநிலத்தில் கேஜிஎப் திரைப்படம் மட்டுமே 100 கோடி வசூல் செய்துள்ள நிலையில் ‘ஜேம்ஸ்’ படம் 100 கோடி வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்