சர்வதேச நாய்கள் தினம்: செல்லப்பிராணிகளுக்கான நாள்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (06:47 IST)
சர்வதேச நாய்கள் தினம்: செல்லப்பிராணிகளுக்கான நாள்!
வீட்டின் செல்லப் பிராணிகளில் ஒன்றான நாய்களுக்கு சர்வதேச நாய்கள் வளர்ப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது 
 
கோபம் சந்தோசம் என நமது அத்தனை உணர்வுகளையும் புரிந்து கொள்ளக்கூடிய குணம் இருப்பதால்தான் செல்லப்பிராணிகளின் ஒன்றான நாய்களை நம்முடைய குழந்தைகளை போல் வீட்டில் வளர்த்து வருகிறோம் 
 
மனிதகுலத்திற்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பாக இருந்த வரும் நாய்கள் பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகஸ்ட் 26ம் தேதி சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாய்கள் மனிதனை கடிப்பதற்காக படைக்கப்பட்ட பிராணிகள் என்ற எண்ணத்தை மாற்றி நாய்களால் மனிதனுக்கு ஏற்படக் கூடிய நன்மைகளை நினைத்துக் கொண்டாட வேண்டிய நாள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் செய்பவர்களை நாய்கள்தான் கண்டுபிடித்து தருகின்றன என்பதும் காவல்துறை உள்பட முக்கிய துறைகளுக்கும் நாய்கள் மோப்பம் பிடிக்க பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட  நாய்களை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்