அடாத மழையிலும் திருப்பதியில் குவியும் பக்தர்கள்: 40 மணி நேரம் காத்திருப்பு!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (14:20 IST)
வார விடுமுறை முடிந்த பின்னரும் திருப்பதியில் இன்னும் கூட்டம் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது என்பதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் தரிசனத்திற்கு 40 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இலவச தரிசனத்திற்கு குறைந்தது இருபத்தி நான்கு மணி நேரம் காத்திருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இலவச தரிசனத்திற்கு காத்திருக்கும் இருபத்தி நான்கு அறைகளிலும் பக்தர்கள் இருக்கிறார்கள் என்றும் திருப்பதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையிலும் குளிரையும் பொருட்படுத்தாமல் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ததாகவும் சுமார் 5 கோடி வரை உண்டியல் காணிக்கை வசூல் ஆனதாகவும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்