திருப்பதி கபிலேஸ்வரர் கோவில் வில்வார்ச்சனை: குவியும் பக்தர்கள்
வெள்ளி, 11 நவம்பர் 2022 (21:16 IST)
திருப்பதிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்பவர்கள் அடுத்ததாக திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலுக்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது
இந்த நிலையில் திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் வில்வார்ச்சனை நடைபெற உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கபிலேஸ்வரர் கோவிலில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை நடைபெறும் என்றும் இதில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.