விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பலர் வருகை தருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் தரிசனத்திற்காக திருப்பதிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாகியுள்ள நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான வரிசையில் பல்லாயிர கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.
சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் தரிசனத்திற்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் 3 நாட்களுக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்காக மக்கள் மேலும் வரவேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.