டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் - தேவஸ்தனம் வெளியீடு!

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (08:43 IST)
டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
 
ஒவ்வொரு மாதமும், அடுத்த மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. அதன்படி டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
 
மேலும் பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான அறைகளை புக் செய்துக்கொள்ள டிசம்பர் மாதத்துக்கான ஒதுக்கீடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
 
திருப்பதி உள்பட ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தால் அதை ஆறு மாதங்களுக்குள் வேற ஒரு தேதியில் தரிசனம் செய்து கொள்ளலாம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்