தொழிலதிபர்களான ராகேஷ் பிந்த், ஷம்சுதீன் அகமது மற்றும் எழுத்தர் ஷாஹித் ரஸா ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அசல் தபால் தலைகளின் பாதி விலைக்கு போலியானவற்றை விற்று மோசடி செய்துள்ளனர். வங்கிப் பதிவுகளின் மூலம் ரூ. 8 கோடிக்கு அதிகமான பணப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையினர் கடிதங்களை சரிபார்த்தபோது, அவற்றின் மீது ஒட்டப்பட்டிருந்த தபால் தலைகள் போலியானது என கண்டறியப்பட்டதால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இந்த கும்பலுக்கும் நாட்டில் நடந்த மற்ற தபால் துறை மோசடிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்று காவல்துறை விசாரித்து வருகிறது.