நாட்டில் சர்வாதிகாரம் முடிவதற்கு இது தொடக்கப் புள்ளி- முன்னாள் முதல்வர்

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (22:56 IST)
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் நீரவ் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார்.

இது சர்ச்சையான நிலையில், இது குறித்து பாஜக அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியான நிலையில்  இன்று, மக்களவை செயலாளர்,அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின்,  கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும் சிவசேனா கட்சித் தலைவருமான  உத்தவ் தாக்கரே, ‘’திருடனை திருடன் என்று அழைப்பது நாட்டில் குற்றமாகிவிட்டது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில், ராகுல்காந்தி தண்டிக்கப்பட்டுள்ளார். நாட்டில் சர்வாதிகாரம் முடிவதற்கு இது தொடக்கப் புள்ளி’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்