நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசனம் செய்யும் டிக்கெட், தங்கும் இடத்திற்கான டிக்கெட், ஆகியவை ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தரிசன டிக்கெட் தேர்வு செய்யப்படும் என்றும், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு மின்னணு டிக்கெட்டுகள் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவை, பிரமோற்சவம் ஆகிய சேவைகளுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி டிக்கெட் வெளியிடப்படும் என்றும் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அதே நாளில் விஐபி தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.