திருப்பதியில் மொட்டை போடுபவர்கள் குளிக்க வெந்நீர்.. தேவஸ்தானம் அறிவிப்பு..!

Siva

வெள்ளி, 26 ஜூலை 2024 (09:39 IST)
திருப்பதி ஏழு முடி காணிக்கை செய்பவர்களுக்கு குளிக்க வெந்நீர் வழங்க தேவஸ்தான நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

திருப்பதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பதும் அதில் பலர் முடி காணிக்கை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது. தினமும் சுமார் 27 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேவஸ்தான அதிகாரி பக்தர்கள் முடி காணிக்கை காணிக்கை செலுத்தும் இடத்தில் ஆய்வு செய்தபோது குளிக்கும் அறை சுகாதாரமாக இல்லாமல் இருப்பதையும் வெந்நீர் வராததையும் கண்டு அதிருப்தி அடைந்தார்.

உடனடியாக குளிக்கும் அறையையும் சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட அவர் முடி காணிக்கை செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் வெந்நீர் வழங்க வேண்டும் என்றும் பழுதடைந்த அனைத்து ஹீட்டர்களையும் மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து உடனடியாக ஹீட்டர்கள் மாற்றப்பட்டதாகவும் முடி காணிக்கை செலுத்தி வருபவர் அனைவருக்கும் தாராளமாக வெந்நீர்  வழங்கப்பட்டதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால் முடி காணிக்கை செலுத்திய பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்