தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில், நேற்று நள்ளிரவு 9-வது மாடியில் மின் கசிவு காரணமாகத் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்தின்போது, விடுதியில் தங்கியிருந்த அனைத்து செஸ் வீரர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் மற்றொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெற இருந்த இந்த கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியின் இன்றைய முதல் நாள் ஆட்டங்கள் அனைத்தும் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி போட்டியின் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினமும் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தால், செஸ் வீரர்கள் யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.