நாடகத்தால் உயிரிழந்த சிறுவன்

வெள்ளி, 29 டிசம்பர் 2017 (07:49 IST)
நாடகத்தில் வருவது போல் நடிக்க முயற்சித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த மாணவன் சித்தரஞ்சன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். வடமாநிலங்களில் ஏராளமானோர் புராண சம்பத்தப்பட்ட நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பர். அதே போல் மாணவ சித்தரஞ்சனும் டிவியில் ஒளிபரப்பாகும் புராண நிகழ்ச்சிகளை பார்த்து, அதில் வரும் கதாபாத்திரங்கள் போல் நடித்து அசத்துவான். சம்பவத்தன்று பள்ளியில் சக மாணவர்கள் கடவுள் காளி போல் நடித்துக் காட்டும்படி கூறினர்.
 
இதையடுத்து துணியின் ஒரு முனையை எடுத்து கழுத்தில் கட்டிய சித்தரஞ்சன் மறு முனையை, அங்கிருந்த கதவுப்பிடியின் கீழ் கட்டினான். இதன்பின் காளியைப் போல் நாக்கை வெளியில் நீட்டி நடிக்க முயற்சித்துள்ளான்.  எதிர்பாராத விதமாக அவனது கழுத்தில் கட்டியிருந்த துணி இறுக்கியதால் மயங்கி விழுந்தான். அதிர்ச்சியடைந்த மாணவர்கள், சித்தரஞ்சனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சித்தரஞ்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் மாணவனின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்