மோடி பிரதமராக வரும் 9-ம் தேதி மாலை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பதவியேற்பு விழா இரவு 7:15 மணிக்கு நடைபெறும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கூட்டணியின் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்
இதனையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன் தொடர்ச்சியாக, ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
வரும் 9-ம் தேதி மாலையில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிலையில் மோடி பிரதமராக பதவியேற்கும் நேரம் திடீரென மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 9-ம் தேதி இரவு 7:15 மணியளவில் பிரதமராக பதவியேற்கிறார் என்றும் இவ்விழாவில் பங்கேற்க வருமாறு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.