அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வரும் நிலையில் விஜய் மல்லையாதான் நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்துவிட்டு சென்றதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை அருண் ஜெட்லி மறுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சர்ச்சைக்குறிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் மல்லையா லண்டன் செல்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே இந்த விஷயம் மத்திய பாஜக அரசுக்கும், ஸ்டேட் பேங்க் வங்கிக்கும் தெரியும் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல், துஷ்யந்த் தாவே எஸ்பிஐ வங்கி இயக்குனரையும், அதிகாரிகளையும், மத்திய அரசின் அதிகாரிகளையும் அணுகி மல்லையா வெளிநாடு செல்ல உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதை தடுக்கும்படியும் கூறியுள்ளார்.
ஆனால், யாரும் எந்த நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால், மல்லையா எந்த ஒரு சிக்கலும் இன்றி வெளிநாடு தப்பினார். நான் கூறியபோதே மத்திய அரசு மல்லையாவை தடுத்திருந்தால் மல்லையா தப்பித்து இருக்க மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.