வானத்தில் பறக்கும்போது குலுங்கிய விமானம்! பயணிகளுக்கு படுகாயம்!

Webdunia
திங்கள், 2 மே 2022 (22:47 IST)
மும்பையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு நேற்று மாலை  வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கும் போது, குலுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை மும்பையில் இருந்து, மேற்கு வங்கம் துர்காப்பூரிற்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று தரையிறங்குகையில் திடீரென்று குலுங்கியது.

இதில், ஏற்பட்ட பாதிப்பில் சுமார் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.  பின்னர், துர்காபூர் விமான நிலையத்தில் மருத்துவ ஊழியர்கள் அழைக்கப்பட்டு, காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நடுவானில் விமானம் பறந்தபோது, வானிலை காரணமாக காற்றில் ஏற்பட்ட மாற்றத்தால் குலுங்கியதாகவும்,கேபினில் வைக்கப்பட்ட பொருட்கள் பயணிகளின் தலையில் விழுந்ததால் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன்பின் விமானம் பத்திரமான தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து,விமானப் போக்குவரத்து இயகு நகரம் விசாரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்